LATEST NEWS
“ஆகஸ்ட் 9-ல இருக்கு பெருசு..!” தமிழ்நாட்டை குறிவைக்கும் என்.ஆர்.காங்கிரஸின் மாஸ்டர் பிளான்.. விஜய்-ரங்கசாமி கூட்டணியால் ஆடிப்போன அறிவாலயம்..!!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, தனது அகில இந்திய என்.ஆர். காங்கிரஸைத் தமிழ்நாட்டிலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது பலத்தை இழந்து வரும் தற்போதைய அரசியல் சூழலில், தமிழ்நாட்டில் தவெகவுடன் கைகோர்த்துச் செயல்பட ரங்கசாமி காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதன் தொடக்கமாக, தனது பிறந்தநாளையொட்டி வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி சென்னையில் பிரமாண்ட விழா ஒன்றை நடத்தி, தமிழ்நாட்டில் கட்சித் தொடக்கம் மற்றும் தவெகவுடனான கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பை ரங்கசாமி வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. புதுச்சேரியைத் தாண்டி தமிழ்நாட்டிலும் தடம் பதிக்க நினைக்கும் ரங்கசாமியின் இந்த அதிரடி அரசியல் நகர்வு, இரு மாநில அரசியல் வட்டாரத்திலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
