LATEST NEWS
BIG BREAKING: பிரதமர் மோடியை கொலை செய்வோம்…. கொலை மிரட்டலால் பரபரப்பு..!!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜூலை 8-ம் தேதி முதல் பிரதமர் மோடி 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா செல்லவுள்ளார். அங்கு ஜூலை 9 அன்று மெல்போர்னில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கும் “மெல்போர்ன் மீட்ஸ் மோடி” என்ற இந்திய வம்சாவளியினரின் பிரம்மாண்ட கூட்டத்தில் அவர் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடர்பான ஃபேஸ்புக் பதிவின் பின்னூட்டத்தில் , “அபு முஸ்தபா” என்ற பெயரிலான ஐடியிலிருந்து இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், “நிகழ்ச்சியின் போது மைதானத்தின் கூரைகளை மூடி வைப்பது நல்லது, இல்லையெனில் அவர் தனது மரணத்திற்காக ஆஸ்திரேலியா வருகிறார்” என்று மிரட்டும் வகையில் எழுதப்பட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலியா நாட்டு ஃபெடரல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட கணக்கின் ஐபி முகவரியைக் கண்டறிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
