LATEST NEWS
காலையிலேயே பரபரப்பு..! அதிமுக MLA-க்கள் மேலும் பலர் ராஜினாமா..? தவெக அமைச்சர் செங்கோட்டையன் பாட் குண்டு.. அதிர்ச்சியில் எடப்பாடி..!!
தமிழக வெற்றிக் கழகத்தில் அமைச்சராக இருக்கும் கே. ஏ. செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து மேலும் பலர் தங்கள் கட்சியில் இணைவார்கள் என்று கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் பரபரப்பாகப் பேசியுள்ளார். திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ததாகவும், அந்த அரசியல் துரோகத்தின் விளைவாகவே அதிமுகவிலிருந்து விலகி பலரும் தவெக- நோக்கி வந்தவண்ணம் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசியல் சூழலில் 6 MLA-க்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், இந்த ராஜினாமா படலம் மேலும் நீடிக்கும் என்பதை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையனின் (KAS) தற்போதைய பேச்சு உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குதிரை பேர அரசியலை உருவாக்கியதே திமுக தான் என்று குற்றம் சாட்டியுள்ள அவர், தங்களின் கொள்கை முடிவுகளில் தவெக உறுதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
