LATEST NEWS
அதிமுகவில் அடுத்த வெடி…! சொந்தக் கட்சி மாஜிக்களுக்கு செக் வைக்கும் இ.பி.எஸ்..! பின்னணியில் உள்ள பகீர் பிளான்..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் ‘பினாமி’ சொத்துக்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரகசியப் பட்டியல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அரசு அதிமுக மாஜிக்களின் மீது ஊழல் வழக்குகளைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில், இந்த விவரங்களை டெல்லியில் உள்ள பாஜக தலைமை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்க எடப்பாடி பழனிசாமி அதிரடியாகத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தனக்கு எதிராகச் செயல்படும் உள் கட்சி எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்தவும், மத்திய அரசின் அழுத்தங்களிலிருந்து தப்பிக்கவும் அவர் இந்த உத்தியைக் கையாளுவதாகத் தெரிகிறது.
இந்த நடவடிக்கை அதிமுகவிற்குள் பெரும் பகீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்தக் கட்சியினரின் பினாமி பட்டியலையே டெல்லியிடம் ஒப்படைக்கத் துணிந்த எடப்பாடி பழனிசாமியின் இந்தத் திட்டம், அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.
