LATEST NEWS
இதுவேற மாறி அரசியல் ஆட்டம்..! “இனி போட்டி விஜய்க்கும், அண்ணாமலைக்கும் தான்” புதிய கட்சி அறிவிப்புடன் உள்ளாட்சித் தேர்தலில் அதிரடி காட்டப் பாயும் ‘We the Leaders…!!
பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் தொடங்கிய ‘We the Leaders’ இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சோழவந்தான் தொகுதி சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக மாபெரும் பேரணி நடத்துவது என்றும், அதனை அண்ணாமலை நேரில் கலந்து கொண்டு தொடங்கி வைப்பார் என்றும் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 18 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ள இந்த இயக்கத்தை, விரைவில் 1 கோடி உறுப்பினர்களுடன் அரசியல் கட்சியாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகிகள், தமிழகத்தில் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கியவுடன் அரசியல் களம் முற்றிலும் சூடுபிடிக்கும் என்று கூறினர். இனிவரும் காலத்தில் தமிழக அரசியலில் தவெக மற்றும் அண்ணாமலையின் கட்சி ஆகிய இருதரப்பிற்கு இடையேதான் நேரடி போட்டி இருக்கும் என்றும், மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விடும் என்றும் பரபரப்பான கருத்துக்களை முன்வைத்தனர்.
மேலும், தவெக அரசு இன்னும் ஆறு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் அதில் போட்டியிடுவது குறித்து ஆலோசிப்போம் என்றும், ஒருவேளை தேர்தல் தள்ளிப்போனால் அண்ணாமலையின் புதிய கட்சி கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி பல்வேறு இடங்களில் பெரிய வெற்றியைப் பெறும் என்றும் குறிப்பிட்டனர். தங்களுக்கு சினிமா பலமோ அல்லது அரசியல் பின்னணியோ இல்லை என்றாலும், மக்கள் சேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு வலிமையுடன் களமிறங்கியுள்ளதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
