“இரண்டு மிஸ்டு கால்.. அடுத்த நாளே பறந்த ₹15 கோடி!” நள்ளிரவில் போன் செய்து கோடிகளில் டீல் முடித்த நடிகர் அமிதாப் பச்சன்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“இரண்டு மிஸ்டு கால்.. அடுத்த நாளே பறந்த ₹15 கோடி!” நள்ளிரவில் போன் செய்து கோடிகளில் டீல் முடித்த நடிகர் அமிதாப் பச்சன்..!!

Published

on

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன், தனது 83 வயதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பிஸியாக நடித்து ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார். கலைத்துறையில் மட்டுமல்லாமல் சமீபகாலமாக ரியல் எஸ்டேட் முதலீடுகளிலும் அவர் காட்டி வரும் வேகம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, அயோத்தியில் பெரும் முதலீடுகளை செய்து வரும் அமிதாப், ஏற்கனவே அங்கு 15,000 சதுர அடி பரப்பளவு கொண்ட பிளாட்டை 15 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, அண்மையில் மேலும் 35 கோடி ரூபாய் மதிப்பில் 2.67 ஏக்கர் நிலத்தையும் அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

இந்த நில கொள்முதல் குறித்து பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளரான அபிநந்தன் லோதா சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். ஒரு நாள் நள்ளிரவு 3 மணிக்கு அமிதாப் பச்சனிடமிருந்து தனது மொபைலுக்கு இரண்டு மிஸ்டு கால்கள் வந்ததாகவும், உடனே அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது அயோத்தி பிளாட்டை உடனே வாங்க விரும்புவதாகக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நள்ளிரவு நேரத்திலேயே போன் மூலம் விலையைப் பேசி முடித்த அமிதாப், சொன்னபடி அடுத்த நாளே 15 கோடி ரூபாய் பணத்தை முழுமையாக அனுப்பி, அந்த பிசினஸ் டீலை அதிரடியாக முடித்ததாக அபிநந்தன் வியப்புடன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in