BREAKING: முதல்வர் விஜய் மீது பிளாக் மெயில் புகார்.. சற்றுமுன் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: முதல்வர் விஜய் மீது பிளாக் மெயில் புகார்.. சற்றுமுன் பரபரப்பு..!!

Published

on

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக மற்றும் சில வாக்காளர்கள் தரப்பில் தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவர் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. தனது தேர்தல் பரப்புரையின் போது, குடும்பத்தினரை ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்துமாறு குழந்தைகளிடம் விஜய் வேண்டுகோள் விடுத்ததன் மூலம், அவர் குழந்தைகளை உணர்ச்சிப்பூர்வமாகப் பிளாக்மெயில் செய்துள்ளதாக மனுதாரர்கள் தங்களது புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுக்களில், விஜய் தனது இறுதிப் பரப்புரையில் பேசிய வீடியோ ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது ஒரு தேர்தல் முறைகேடு மற்றும் குற்றம் என்று மனுதாரர்களான ஆர்.டி. சேகர் மற்றும் இணிகோ இருதயராஜ் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு முதலமைச்சர் விஜய் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in