₹2.5 கோடியா?ஒரு வாட்ச் விலை ஒரு சொகுசு வீட்டின் மதிப்பா? அக்கா திருமணத்தில் ஒட்டுமொத்த திரையுலகையும் மிரள வைத்த ஜான்வி கபூர்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

₹2.5 கோடியா?ஒரு வாட்ச் விலை ஒரு சொகுசு வீட்டின் மதிப்பா? அக்கா திருமணத்தில் ஒட்டுமொத்த திரையுலகையும் மிரள வைத்த ஜான்வி கபூர்..!

Published

on

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகளான அன்ஷுலா கபூரின் திருமணக் கொண்டாட்டங்கள் தான் தற்போது ஒட்டுமொத்த சினிமா உலகிலும் ஹாட் டாபிக். முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் திரண்டு வந்து வாழ்த்திய இந்த கோலாகல விழாவில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூரின் வரவு தான் அனைவரின் பார்வையும் கவர்ந்தது. விழாவின் ஒரு பகுதியாக அவர் உடுத்தியிருந்த பாரம்பரிய பட்டுச் சேலை புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் வேளையில், மற்றொரு நிகழ்வில் அவர் அணிந்திருந்த ஆடம்பரமான கைக்கடிகாரம் தான் தற்போதைய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பிங்க் நிற உடையில் தேவதை போல் காட்சியளித்த ஜான்வி கபூர் கட்டியிருந்த அந்த வாட்ச்சின் மதிப்பு சுமார் 2.5 கோடி ரூபாய் என்ற தகவல் வெளியாகி நெட்டிசன்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது. பார்ப்பவர்களின் கண்களைக் கூசவைக்கும் வகையில் 251 அசல் வைரக் கற்கள் மற்றும் தூய தங்க டயல் பிளேட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாட்ச், ஒரு நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்நாள் சேமிப்பை விட அதிகம் என்பதால் சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த பேச்சுகள் தான் தற்போதைய டாப் ட்ரெண்டிங்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in