85 வயசுல இப்படி ஒரு அதிர்ஷ்டமா..?! மழையில மரம் விழுந்தா ‘இவ்வளவு’ பணம் கிடைக்குமா…! வியக்க வைக்கும் நிஜக் கதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

85 வயசுல இப்படி ஒரு அதிர்ஷ்டமா..?! மழையில மரம் விழுந்தா ‘இவ்வளவு’ பணம் கிடைக்குமா…! வியக்க வைக்கும் நிஜக் கதை..!!

Published

on

கர்நாடக மாநிலம் பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் 85 வயதான என்.ஜி.கேசரி. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டு முற்றத்தில் ஒரு சிறிய செடி முளைத்தது. மற்ற தாவரங்களைப் போலவே இதையும் அவர் அன்போடு வளர்த்து வந்தார். அது வளர வளரத்தான், அது சாதாரண மரம் அல்ல, மிகவும் மதிப்புமிக்க ‘சந்தன மரம்’ என்பதை அவர் கண்டறிந்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மரத்தை அவர் தனது வீட்டில் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வளர்த்து வந்தார்.

சமீபத்தில் பெய்த பலத்த மழை மற்றும் கடுமையான காற்று காரணமாக, அவரது வீட்டிற்கு அருகில் இருந்த மற்றொரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து, இந்த சந்தன மரத்தின் மீது விழுந்தது. இதில், அவர் 40 வருடங்களாகப் போற்றிப் பாதுகாத்த சந்தன மரம் முறிந்து விழுந்தது. மரம் முறிந்ததைக் கண்டு ஆரம்பத்தில் அவர் மிகுந்த கவலையும் நஷ்டமும் அடைந்தாலும், அதுவே அவருக்கு ஒரு ஜாக்பாட்டாக மாறும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

Advertisement

மரம் விழுந்தது குறித்து கேசரி உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மரத்தை ஆய்வு செய்து, அதை மைசூரில் உள்ள அரசு சந்தனக் கிடங்கிற்கு மாற்ற அனுமதித்தனர். ஆய்வில் அந்த சந்தன மரம் சுமார் ஒரு மெட்ரிக் டன் எடை கொண்டது எனத் தெரியவந்தது. இதையடுத்து, ‘கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட்’ நிறுவனம் அந்த மரத்தைக் கொள்முதல் செய்து, அதன் மதிப்பிற்காக சுமார் 28 லட்ச ரூபாயை கேசரியிடம் ஒப்படைத்தது. பலத்த மழையால் விழுந்த மரம், முதியவரை ஒரே நாளில் லட்சாதிபதியாக்கியுள்ளது.பல ஆண்டுகளாக சந்தன மரத்தைப் பாதுகாத்து, பேணிப் பராமரிப்பதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக கர்நாடக அரசு கேசரிக்கு ‘சந்தன சிரோமணி’ விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in