CINEMA
“இன்னொரு கார் வாங்க யாருக்கோ முத்தம் கொடுக்கணுமா?.. சாய் பல்லவி கொடுத்த மரண மாஸ் ஸ்டேட்மெண்ட்… வாயடைத்துப் போன சினிமா உலகம்”..!!
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் வரை பிஸியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. தமிழில் ‘மாரி 2’, ‘என்ஜிகே’ போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையிலும், ‘கார்கி’ மற்றும் மெகா ஹிட்டான ‘அமரன்’ திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து, அவரது மார்க்கெட்டை உயர்த்தின. தற்போது பாலிவுட்டில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ படத்தில் நடித்து வரும் அவர், தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கமிட் ஆகியிருக்கும் ‘ஓம்’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. எவ்வளவு பெரிய தொகையைக் கொட்டிக் கொடுத்தாலும் கிளாமராக நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கும் சாய் பல்லவி, தற்போது பாலிவுட்டுக்குச் சென்றிருப்பதால் இந்த பாலிஸி அங்கே எடுபடுமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
இந்நிலையில், படங்களில் நெருக்கமான மற்றும் முத்தக் காட்சிகளில் நடிப்பது குறித்து சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அதிரடியான கருத்தைப் பகிர்ந்துள்ளார். தனக்கு ஒரு காதலர் இருந்தால் அவர் வேறொரு பெண்ணை முத்தமிடுவதை தான் விரும்ப மாட்டேன் என்று குறிப்பிட்ட அவர், வாழ ஒரு வீடு, கார் மற்றும் நல்ல குடும்பம் இருந்தாலே ஒரு மனிதர் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும், அது தன்னிடம் ஏற்கனவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கூடுதலாக இன்னொரு கார் வாங்க வேண்டும் என்பதற்காகப் படங்களில் வேறொருவரை முத்தமிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று நெத்தியடியாகக் கூறியுள்ள சாய் பல்லவி, தனது படத்தில் நெருக்கமான காட்சிகள் இருக்க வேண்டும் என இயக்குநர்கள் விரும்பினால் தாராளமாக வேறொரு நடிகையைத் தேர்வு செய்து கொள்ளலாம், அதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் கறாராகப் பேசியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
