“பீஸ் கட்டலைனா டி.சி தரமாட்டீங்களா..?” பிரைவேட் ஸ்கூல்களுக்கு அமைச்சர் வைத்த அதிரடி செக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பீஸ் கட்டலைனா டி.சி தரமாட்டீங்களா..?” பிரைவேட் ஸ்கூல்களுக்கு அமைச்சர் வைத்த அதிரடி செக்..!!

Published

on

தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கட்டண விவரங்களை வெளிப்படையாக வெளியிடாத பள்ளிகள் மீது கடுமையான ‘அஸ்திரம்’ பாயும் என்று அவர் மிகவும் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். இதன் மூலம் பள்ளிகள் தன்னிச்சையாகக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசு முயல்கிறது.

பள்ளிகளில் கட்டண நிலுவை உள்ளது என்ற காரணத்தைக் காட்டி, மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க எந்தவொரு தனியார் பள்ளியும் மறுக்கக் கூடாது என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களின் தொடர் கல்விக்குத் தேவையான முக்கிய ஆவணங்களைத் தடுத்து நிறுத்துவது தவறான செயல் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதைப் பள்ளிகள் எக்காரணம் கொண்டும் தடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in