LATEST NEWS
அடுத்ததலைமுறைக்கும் செல்லட்டும்… இனி ஸ்நாக்ஸ் டைம்லயும் தமிழ் நெறி.. பிரிட்டானியாவின் “MILK BIKIS” பிஸ்கட்டில் திருக்குறள்… பிரிட்டானியா நிறுவனம் புதிய முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்..!!
பிரிட்டானியா நிறுவனம் தனது ‘மில்க் பிகிஸ்’ பிஸ்கட்களில் திருக்குறளை அச்சிட்டு, அதனை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. உலகப் பொதுமறையான திருக்குறளைக் குழந்தைகளிடம் எளிதாகக் கொண்டு சேர்த்து, அதனை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிஸ்கட் தயாரிப்பில் திருக்குறளின் எழுத்துக்களை மிகத் துல்லியமாக அச்சிடுவது தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்களைக் கொண்டிருந்தாலும், பல மாத தீவிர உழைப்பிற்குப் பின் இதனை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தியுள்ளதாகப் பிரிட்டானியா நிறுவனம் மிகுந்த பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
இந்த விசேஷ பிஸ்கட் பாக்கெட்டுகளின் மேல் ‘திருக்குறள் சீரிஸ்’ என்று அச்சிடப்பட்டு, கவரைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிஸ்கட்களின் மேல் ‘அறப்பால்’, ‘பொருட்பால்’, ‘இன்பத்துப்பால்’ போன்ற குறள்களின் அதிகாரப் பிரிவுகள் மற்றும் முக்கிய வார்த்தைகள் மிகத் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குழந்தைகள் பிஸ்கட் சாப்பிடும்போதே தமிழ் மொழியின் மீதும், வாழ்வியல் நெறிகள் மீதும் ஆர்வம் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
