யாரு சாமி நீங்களாம்…?! ஊரே வெள்ளத்துல மிதக்குது.. இவங்க ‘சரக்குல’ மிதக்குறாங்க..! ரெயின்கோட் அணிந்து சீயெர்ஸ் அடித்த அதிரடிக் காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாரு சாமி நீங்களாம்…?! ஊரே வெள்ளத்துல மிதக்குது.. இவங்க ‘சரக்குல’ மிதக்குறாங்க..! ரெயின்கோட் அணிந்து சீயெர்ஸ் அடித்த அதிரடிக் காட்சி..!!

Published

on

தற்போது நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், சமூக ஊடகங்களில் மழைக் காலக் காட்சிகள் வைரலாகி வருகின்றன. ஆனால், சமீபத்தில் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ முற்றிலும் வித்தியாசமான காரணத்திற்காக இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. மழையினால் வெள்ளக்காடாக மாறிய ஒரு சாலையை, இரண்டு இளைஞர்கள் தங்களின் பொழுதுபோக்கு இடமாக மாற்றிய வினோதமான நிகழ்வு இதில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில், முழங்கால் அளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ள ஒரு சாலையின் ஓரத்தில் உள்ள சுவரில் இரண்டு இளைஞர்கள் ரெயின்கோட் அணிந்து கொண்டு மிக நிதானமாக அமர்ந்திருக்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் அங்கிருந்து விரைவாக தப்பிக்க நினைப்பார்கள். ஆனால், இந்த இளைஞர்களோ எந்தவித பதற்றமும் இன்றி, ஆற்றில் கால் நனைத்து அமர்வது போல வெள்ள நீரில் கால்களைத் தொங்கவிட்டு, கையில் மதுக் கோப்பையுடன் மிகவும் நிதானமாக மழையை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisement

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட கருத்துக்கள் குவிந்து வருகின்றன. சிலர், “இவர்கள் வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தெரிந்தவர்கள்” என்றும், “கஃபே செல்ல காசு இல்லாதபோது இந்த இடமே ஒரு சொகுசு விடுதி போலத்தான் இருக்கும்” என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம், மழை நீரில் இவ்வாறு அமர்வது ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் உகந்தது அல்ல என்றும், இதுபோன்ற ஆபத்தான செயல்களை யாரும் பின்பற்ற வேண்டாம் என்றும் சிலர் எச்சரித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in