BREAKING:”சிக்கன் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு சிக்கன் கிடையாது.. வெளியான திடீர் அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING:”சிக்கன் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு சிக்கன் கிடையாது.. வெளியான திடீர் அறிவிப்பு..!!

Published

on

தமிழகத்தில், வரும் நாட்களில் ஒரு வார காலத்திற்குச் சிக்கன் விற்பனையை முழுமையாக நிறுத்த கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடி முடிவெடுத்துள்ளது. இறைச்சிக் கூடங்களுக்குக் கொண்டு வரப்படும் கோழிகளுக்கு, அவை வெட்டப்படுவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை முழுமையாகக் கைவிட வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பான முறையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு உடனடியாக உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தச் சிக்கன் விற்பனை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இறைச்சிக் கூடங்களுக்குக் கொண்டுவரப்படும் கோழிகளின் குடலில் தீவனம் தங்குவதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் மற்றும் வணிக ரீதியான இழப்புகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த நெறிமுறை கோரப்படுவதாக வணிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தப்படவுள்ள இந்த ஒரு வார கால விற்பனை நிறுத்தத்திற்கான அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தத் திடீர் முடிவால் தமிழகம் முழுவதும் சிக்கன் பிரியர்கள் மற்றும் ஹோட்டல் அதிபர்கள் இடையே தற்போதே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in