DISTRICT NEWS
முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவு.. திமுக அதிரடி மனு.. தமிழக அரசியலில் நள்ளிரவு பரபரப்பு..!!
கரூர் பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசும், காவல்துறையும்தான் பொறுப்பு என்று தமிழக முதலமைச்சர் விஜய் விமர்சித்திருந்தார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தரப்பில் சிபிஐ-யிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கியுள்ள அந்தப் புகார் மனுவில், முதலமைச்சர் விஜய்யின் இத்தகைய கருத்துகளும் நடவடிக்கைகளும், தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் சிபிஐ விசாரணையின் போக்கை திசைதிருப்பும் விதமாகவும், விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு முதல்வர் விஜய் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ அமைப்பிற்கு திமுக வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் (தவெக) பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையிலான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
