LATEST NEWS
சொந்த தொகுதியில் பறக்கும் அதிரடி அறிவிப்புகள்..! முதல்வர் விஜய்யின் மெகா பிளான்..!!!
தனது சொந்தத் தொகுதியான பெரம்பூரில் ரூ.3 கோடி மதிப்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்வதற்காக, சென்னை மாநகராட்சி ஆணையருக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த முக்கிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, தனது பெரம்பூர் தொகுதியில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
தனது MLA மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை அவர் முன்மொழிந்துள்ளார். இதில் குறிப்பாக, ரூ.50 இலட்சம் மதில் 6 பேருந்து நிறுத்தங்கள், ரூ.50 இலடச்சத்தில் விளையாட்டு வளாகம் மற்றும் ரூ. 25 இலட்சம் மதிப்பில் தற்காலிக பணியாளர்களுக்கான ஓய்வறை உள்ளிட்ட மொத்தம் 7 முக்கிய மேம்பாட்டுத் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
