LATEST NEWS
FLASH: அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும்… உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்திற்கான விளம்பரம் ஒரே நாளில் வெளியிடப்பட்டு, அதே நாளில் எந்தவிதமான முறையான தேர்வு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல், விதிகளை மீறி பணி நியமனங்கள் வழங்கப்பட்டது விசாரணையில் அம்பலமானது. இதனால், இவர்களின் பணி நீக்கம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பை தற்போத உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, புறவாசல் வழியாக நடைபெற்ற இந்த 54 இளநிலை உதவியாளர்களின் பணி நியமனமும் முற்றிலும் சட்டவிரோதமானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 54 பேரையும் உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி, உச்ச நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
