உன்னை கட்டிக்கிட்டு என் வாழ்க்கையே போச்சு..! பொது இடத்தில் மனைவியிடம் அடி வாங்கியும் அடங்காத கணவன்… ரீல்ஸ் ஜோடிகளையே மிஞ்சிய நிஜ தம்பதியின் லைவ் சண்டை..! வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உன்னை கட்டிக்கிட்டு என் வாழ்க்கையே போச்சு..! பொது இடத்தில் மனைவியிடம் அடி வாங்கியும் அடங்காத கணவன்… ரீல்ஸ் ஜோடிகளையே மிஞ்சிய நிஜ தம்பதியின் லைவ் சண்டை..! வைரல் வீடியோ..!!

Published

on

மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் உள்ள பங்காட் ஹோட்டலில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான சண்டை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருக்கிறார் என்ற ரகசிய தகவல் மனைவிக்கு கிடைத்துள்ளது. பதறியடித்துக் கொண்டு, அந்த ஹோட்டலுக்குள் நுழைந்த மனைவி, சந்தேகப்பட்ட அந்த அறையின் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்பட்ட அடுத்த நொடி, உள்ளே தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.

​ஆத்திரமடைந்த மனைவி பொது இட என்றும் பாராமல் தன் கணவனை சரமாரியாக அடிக்கத் தொடங்கினார். நிலைமை கையை மீறிப்போனதும், கணவன் பயந்துபோய் “நானாக வரவில்லை, இந்த பெண் தான் என்னை கூட்டிட்டு வந்தாள்” என்று பழியை தூக்கி அந்தப் பெண் மீது போட்டான். உடனே அந்தப் பெண், “இவருக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியாது, என்று அப்படியே அந்த இடத்தை விட்டு நழுவ பார்த்தார். அடி வாங்கிய பிறகும் சற்றும் அடங்காத கணவன், “உன்னை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையே போச்சு” என்று தனது ஆதங்கத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தினார்.

Advertisement

ஹோட்டலில் நடந்த சண்டையோடு நிறுத்தாத மனைவி, தன் கணவனை அடித்துக்கொண்டே அங்கிருந்த காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார். காவல் நிலையத்திற்குச் சென்ற பிறகும் இருவருக்கும் இடையேயான மோதல் ஓயவில்லை. அங்குள்ள காவலர்கள் முன்னிலையிலேயே இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்த காவல் நிலையமே சில மணி நேரங்களுக்கு ஒரு போர்க்களம் போல காட்சியளித்தது.காவல் நிலையத்தில் கணவன், “எனக்கு இவளுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை, உடனடியாக விவாகரத்து வேண்டும். நான் விரும்பும் வேறு ஒரு பெண்ணைத்தான் இனி கல்யாணம் செய்வேன்” என்று அடம் பிடித்தார். அதற்கு அந்த மனைவியோ, “அவ்வளவு சீக்கிரம் உன்னை நான் சும்மா விடமாட்டேன், உனக்கு விவாகரத்து தரவே முடியாது” என்று பிடிவாதமாக மறுத்து மல்லுக்கட்டினார். இந்த தம்பதியின் வீடியோ மற்றும் செய்தி தற்போது நெட்டிசன்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in