LATEST NEWS
“அம்மா அழாதே.. நான் இருக்கிறேன்..!” தாயின் வலியை உணர்ந்த பிஞ்சு நெஞ்சம்.. கண்ணீரில் நனைய வைத்த ஒரு வயதுக் குழந்தையின் வைரல் காட்சி..!!!
சமூக வலைதளங்களில் தற்பொழுது ஒரு தாய் மற்றும் அவரது ஒரு வயதுக் குழந்தையின் நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தாய் தனது ஒரு வயதுக் குழந்தையை படுக்கையில் தூங்க வைக்க முயற்சிக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடல் சமநிலை தவறி, தலைகீழாக தரையில் விழுகிறார். தலையில் பலத்த அடிபட்டதால், அந்தத் தாய் கடுமையான வலியால் துடித்தபடி தன் தலையைப் பிடித்துக் கொண்டு தரையிலேயே உட்கார்ந்து விடுகிறார்.
பொதுவாக இவ்வளவு சிறிய குழந்தைகள் தங்களுக்கு அடிபட்டாலே அழுது அடம் பிடிப்பார்கள். ஆனால், இங்கு தன் தாய் வலியால் துடிப்பதைக் கண்ட அந்த ஒரு வயதுக் குழந்தை, ஒரு நொடி கூட தாமதிக்காமல் படுக்கையிலிருந்து எழுந்து தாயை நோக்கித் தவழ்ந்து வருகிறது. தன் பிஞ்சு கரங்களால் தாயின் தலையை மிகவும் மென்மையாகவும் அன்பாகவும் வருடிக் கொடுக்கத் தொடங்குகிறது. “அம்மா அழாதே, நான் இருக்கிறேன்” என்று ஆறுதல் கூறுவது போல் அக்குழந்தை செய்த செயல் அங்கிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது.
https://www.instagram.com/reel/DavFVWHoEM1/?utm_source=ig_web_button_share_sheet
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த உணர்ச்சிகரமான வீடியோவை இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோவின் பின்னணியில் ‘ரங் தே பசந்தி’ திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற ‘லுகா சுப்பி’ பாடல் ஒலிக்கிறது. லதா மங்கேஷ்கர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவான இப்பாடல் இந்த நிகழ்வை மேலும் உணர்வுப்பூர்வமாக மாற்றுகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள், “ஒரு குழந்தைக்கு அதன் தாய்தான் உலகம், தாய்க்கு ஒரு துன்பம் என்றால் குழந்தையால் தாங்க முடியாது” என்று நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
