“பீகார்னா ஏழை மாநிலம்னு நினைச்சீங்களா..? பாட்னா குடிசைப் பகுதியில் வரிசையாக மாட்டப்பட்டுள்ள AC-க்கள்…! மிரண்டு போன நெட்டிசன்கள்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பீகார்னா ஏழை மாநிலம்னு நினைச்சீங்களா..? பாட்னா குடிசைப் பகுதியில் வரிசையாக மாட்டப்பட்டுள்ள AC-க்கள்…! மிரண்டு போன நெட்டிசன்கள்..!!”

Published

on

பீகார் மாநிலம் பாட்னாவில் ஓடும் இரயில் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக குடிசைப் பகுதிகள் என்றாலே கிழிந்த தார்ப்பாய்கள், மூங்கில் தட்டிகள் மற்றும் கடும் வெயிலில் தகிக்கும் மக்கள் தான் நம் நினைவுக்கு வருவார்கள். ஆனால், இந்த வீடியோவில் இரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் இருக்கும் சாதாரண குடிசை வீடுகளின் சுவர்களில் புத்தம் புதிய ஏசிகள் மாட்டப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. சில குடிசைகளில் ஒன்றல்ல, இரண்டு ஏசிகள் வரை பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்து இணையவாசிகள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி, குறுகிய காலத்திலேயே 1.4 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், 2.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. “பீகார் ஒரு ஏழை மாநிலம் என்று சொல்பவர்களுக்கு இந்த வீடியோவை அனுப்புங்கள்” என்று குறிப்பிட்டு மக்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

https://www.instagram.com/reel/DaruCEqJc_Z/?utm_source=ig_web_button_share_sheet

குடிசை வீடுகளில் ஏசி இருப்பதைப் பார்த்த நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் விவாதங்களை எழுப்பியுள்ளனர். “பீகாரிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல; ஏழையாக வேண்டுமானாலும் வாழ்வார்கள், ஆனால் வெயிலோடு சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்” என்று சிலர் பாராட்டியுள்ளனர். அதே சமயம், “இது நிச்சயம் திருட்டு மின்சாரத்தின் கைவண்ணமாகத்தான் இருக்க வேண்டும்” என்றும், “இவை பக்கா வரதட்சணையாக வந்த ஏசிகள், வந்துவிட்டதால் வேறு வழியின்றி பயன்படுத்துகிறார்கள்” என்றும் நகைச்சுவையாகவும், விமர்சன ரீதியாகவும் கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த இடம் பாட்னாவின் தலைமைச் செயலக ஹால்ட் இரயில் நிலையம் அருகே உள்ள பகுதி என்று உள்ளூர்வாசிகள் சிலர் அடையாளம் காட்டியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in