“இப்படி உளறினால் கவர்மெண்ட்டுக்கு சிக்கல்” தவெக-வில் இணையும் மாற்றுக்கட்சி தலைவர்களால் கடுப்பான முதலமைச்சர் விஜய்… ஆலோசகர்களிடம் காட்டிய அதிரடி கோபம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்படி உளறினால் கவர்மெண்ட்டுக்கு சிக்கல்” தவெக-வில் இணையும் மாற்றுக்கட்சி தலைவர்களால் கடுப்பான முதலமைச்சர் விஜய்… ஆலோசகர்களிடம் காட்டிய அதிரடி கோபம்..!

Published

on

மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணையும் தலைவர்களின் தேவையற்ற பேச்சுகளால் தமக்குத் தலைவலி ஏற்படுவதாக முதலமைச்சர் ஜே. ஜோசப் விஜய் தனது ஆலோசகர்களிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அண்மையில் வைகோவைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் குதிரை பேர சர்ச்சையை மீண்டும் தீவிரமாக கிளப்பியதுதான் முதலமைச்சரின் இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

கட்சியின் முக்கிய முகங்களாகக் கருதப்படுபவர்களே பொதுவெளியில் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் உளறுவதைக் கண்டித்துள்ள விஜய், இதுபோன்ற சர்ச்சைக்குரிய பேச்சுகள் தவெக அரசுக்குச் சட்டரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளையும் சிக்கல்களையும் உருவாக்கும் என எச்சரித்துள்ளார். மேலும், பிற கட்சிகளில் இருந்து வரும் தலைவர்கள் தங்களது பேச்சில் மிகுந்த கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in