வயசு வெறும் நம்பர் தான் பாஸ்…! 91 வயதில் வானில் பறந்து ‘Skydiving’ சாகசம் செய்த தாத்தா… நற்பணிக்காக லட்சக்கணக்கில் நிதி திரட்டி மாஸ் காட்டிய வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வயசு வெறும் நம்பர் தான் பாஸ்…! 91 வயதில் வானில் பறந்து ‘Skydiving’ சாகசம் செய்த தாத்தா… நற்பணிக்காக லட்சக்கணக்கில் நிதி திரட்டி மாஸ் காட்டிய வைரல் வீடியோ..!!

Published

on

பிரிட்டனைச் சேர்ந்த 91 வயதான ஆலன் ஸ்டில் என்ற முதியவர், தனது ஊரில் உள்ள ஒரு சமூக நல மையத்திற்காக நிதி திரட்டும் நோக்கில், விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து ‘ஸ்கைடைவிங்’ (Skydiving) சாகசம் செய்துள்ளார். வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த முதிர்ந்த வயதிலும் அவர் காட்டிய துணிச்சல் ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆலன் ஸ்டில் மேற்கொண்ட இந்த அதிரடி சாகசத்தின் மூலம், சுமார் 5,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 4.8 லட்சம் ரூபாய்) நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்தத் தொகை Surrey பகுதியில் உள்ள ‘ரோவ்லீஸ்’ என்ற சமூக நல மையத்திற்கு வழங்கப்பட உள்ளது. இந்த மையம் அப்பகுதி மக்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமூகக் கூடல்கள் மற்றும் சுற்றுலாப் பயணங்களை ஏற்பாடு செய்து, முதியவர்களின் தனிமையைப் போக்கும் பணிகளைச் செய்து வருகிறது.

Advertisement

https://www.instagram.com/reel/DZ9tIohoWyj/?utm_source=ig_web_button_share_sheet

விமானத்தில் இருந்து குதித்த அந்த த்ரில்லான அனுபவம் குறித்துப் பேசிய ஆலன், “அங்கிருந்து கீழே குதித்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது, அனைத்தும் மிக வேகமாக நடந்து முடிந்துவிட்டது, இது மிகவும் சிலிர்ப்பாக இருந்தது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வயதிலும் அவர் காட்டிய அசாத்திய துணிச்சலைப் பாராட்டி, அந்த மையம் அவருக்குப் புகைப்படத்துடன் கூடிய சிறப்புப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது. மேலும், ஆலனின் இந்த சாகச வீடியோ சமூக வலைதளங்களில் பலரது நெஞ்சங்களை நெகிழச் செய்து, வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in