CRIME
“தினமும் போனில் பேசிய அந்த ஆண்கள்…!” மனைவி அக்கவுண்டிற்கு வந்த கூகுள் பே பணம்.. நள்ளிரவு 2 மணிக்கு கணவன் போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் கலம்போலி பகுதியில், மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டதோடு, அவரது கூகுள் பே கணக்கிற்குத் தொடர்ந்து பணம் வந்த விவகாரத்தில் டெலிவரி பாயான மோனிஷ் கோப் என்ற கணவர், தனது மனைவி பிங்கியை நள்ளிரவில் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். உயிரிழந்த பெண், வங்காளதேச நாட்டைச் சேர்ந்த சோனியா முகமது அபு காதுன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தன் மனைவி பல ஆண்களுடன் போனில் பேசுவதையும், அடையாளம் தெரியாத எண்களில் இருந்து அவரது கூகுள் பே கணக்கிற்கு தினமும் பணம் வருவதையும் மோனிஷ் கோப் கடுமையாக எதிர்த்து வந்ததால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் இருவருக்கும் இடையே மீண்டும் இதே விவகாரத்தில் கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த மோனிஷ், மனைவியின் முகம், கழுத்து, மார்பு மற்றும் வயிற்றில் கைகளாலும் கால்களாலும் கொடூரமாகத் தாக்கியதில் பிங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மூத்த காவல் ஆய்வாளர் தனஜி நரன்வார் தலைமையிலான உயர் போலீஸ் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றியதோடு, தப்பியோட முயன்ற கணவர் மோனிஷ் கோப்பைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
