LATEST NEWS
அதிமுகவில் அடுத்த பூகம்பம்!.. மேலும் 6 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்யத் தயார்?.. டெல்லிக்கு அவசர தூது அனுப்பிய இ.பி.எஸ்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் மேலும் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த எம்.எல்.ஏ-க்கள் தங்களை ஆளும் தவெக தரப்பில் இணைத்துக் கொள்ளவோ அல்லது பதவிகளைத் துறக்கவோ சம்மதம் தெரிவித்துள்ளதால் அதிமுக தலைமை கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், தன்னிடம் விருப்பம் தெரிவித்த 6 பேரின் பட்டியலை மூத்த அமைச்சர் ஒருவர் தலைமைக்குக் கொண்டு சென்றபோது, தற்சமயம் இத்தகைய அதிரடி நகர்வுகள் தேவையில்லை எனக் கூறி அவர்களைச் சிறிது காலம் காத்திருக்குமாறு ஆளும் தரப்பு உயர் தலைமை தற்காலிகமாக ‘வெயிட்டிங் லிஸ்டில்’ வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளையில், தனது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு மாறுவதைத் தாண்டி, அவர்கள் அமமுக பக்கமோ அல்லது சசிகலா தரப்பிற்கோ கட்சி தாவிவிடக் கூடாது என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகவும் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார். கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த உள்கட்சி நெருக்கடியைச் சமாளிக்கவும், எஞ்சியிருக்கும் எம்.எல்.ஏ-க்களைத் தக்க வைக்கவும் அவர் டெல்லி மேலிடத்தின் உதவியை நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தரப்புடன் எடப்பாடி பழனிசாமி அவசரமாகத் தொலைபேசி வாயிலாகப் பேசி விவாதித்ததாகப் பேச்சு அடிபடும் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வெடித்துள்ள இந்த ராஜினாமாப் படலம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
