LATEST NEWS
“விசிகவின் CM கனவு நனவாகும்” நிர்வாகிகளுக்கு திருமாவளவன் போட்ட அதிரடி உத்தரவு;…”அமைச்சர் பதவிக்கு ஏன் புலம்புறீங்க?” என திமுகவுக்கு மறைமுக சாடல்.!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மண்டலச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் சரியாகச் செயல்பட்டால் விசிகவின் முதலமைச்சர் கனவு என்பது நிச்சயம் நனவாகும் என்று ஓப்பனாகப் பேசியுள்ளார். கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த முக்கிய இலக்கை கட்சி நிர்வாகிகள் முன் வைத்துள்ளார்.
மேலும், இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுவிட்டு அதற்குள் அமைச்சர் பதவியா என்று பலர் புலம்பித் தள்ளுவதாகக் கூறி திமுகவை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். தங்களின் அரசியல் பலத்தைக் குறைத்து மதிப்பிடுபவர்களுக்கும், தங்களுக்கு எதிராகக் கருத்து சொல்பவர்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் அவரது இந்த உரை அமைந்துள்ளது.
இருப்பினும், தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பதற்கு அந்த இரண்டு இடங்களின் ஆதரவு என்பது மிக அவசியமான ஒன்றாக இருந்தது என்று திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். அந்தத் தேவைதான் தங்களின் இரண்டு தொகுதிகளின் வெற்றிக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தைத் தேடித்தந்துள்ளது என்றும் அவர் ஆணித்தரமாக விளக்கியுள்ளார்.
