“ஏய்.. திருடப்பயலே எங்க கிட்டயே வா!.. ஓடும் ரயிலில் மொபைல் பறிக்க முயன்ற திருடன்.. பயணிகள் கொடுத்த ‘லைவ்’ மரண பயம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ”..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஏய்.. திருடப்பயலே எங்க கிட்டயே வா!.. ஓடும் ரயிலில் மொபைல் பறிக்க முயன்ற திருடன்.. பயணிகள் கொடுத்த ‘லைவ்’ மரண பயம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ”..!!!

Published

on

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இரயில் திருட்டுகள் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, நெரிசல் மிகுந்த இரயில் நிலையங்களிலும், இரவு நேரப் பயணங்களின்போது பயணிகள் அயர்ந்து தூங்கும் சமயங்களிலும், கொள்ளையர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டுகின்றனர். இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஓடும் ரயிலில் பயணி ஒருவரிடமிருந்து மொபைல் போனைப் பறிக்க முயன்ற திருடன் ஒருவன், சக பயணிகளிடம் கச்சிதமாகச் மாட்டிக்கொண்டான்.

போனைப் பறிக்க அவன் கையை நீட்டிய நொடியிலேயே, சுதாரித்துக் கொண்ட பயணிகள் அவனது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டனர். தப்பிக்க வழி தெரியாமல் திணறிய அந்தத் திருடனை, பயணிகள் ரயிலின் உள்ளே இருக்கும் லக்கேஜ் வைக்கும் மேல் ரேக்கிலேயே தலைகீழாகத் தொங்கவிட்டனர். கைவரிசையைக் காட்ட நினைத்த திருடனுக்கு, இந்தத் திருட்டு முயற்சி அவன் வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு மிகக் கடுமையான விலையைக் கொடுத்து முடிந்துள்ளது. ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் தொங்கவிடப்பட்ட அவனது வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in