“பக்கத்துல ஆள் இல்லையா?” 60 கி.மீ தூரத்து அதிகாரியை கூட்டி வந்து அவசர பத்திரப்பதிவு ஏன்.? சிட்பண்ட் பதிவாளர் வந்த பின்னணி.. பழனியில் ரூ.100 கோடியில் கோவில் நிலம் முறைகேட்டை அம்பலப்படுத்திய திமுக சட்டப்பிரிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பக்கத்துல ஆள் இல்லையா?” 60 கி.மீ தூரத்து அதிகாரியை கூட்டி வந்து அவசர பத்திரப்பதிவு ஏன்.? சிட்பண்ட் பதிவாளர் வந்த பின்னணி.. பழனியில் ரூ.100 கோடியில் கோவில் நிலம் முறைகேட்டை அம்பலப்படுத்திய திமுக சட்டப்பிரிவு..!!

Published

on

தமிழகத்தில் ஆட்களை முன்கூட்டியே ‘பிக்ஸ்’ செய்து பத்திரப்பதிவு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகத் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். ஜூலை 3-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட பத்திரப்பதிவு ஆவணத்தைச் சார்பதிவாளர் ஏற்க மறுத்துள்ளார். அதன் பிறகு வந்த வார விடுமுறை நாட்களைத் தொடர்ந்து, ஜூலை 6-ம் தேதி திங்கட்கிழமை அன்று வழக்கமான சார்பதிவாளர் விடுமுறையில் சென்றுள்ளார்.

இந்த நிலையில், பொறுப்பு சார்பதிவாளராக அருகில் உள்ள சத்திரப்பட்டி அல்லது கீரனூர் அலுவலக அதிகாரிகளை அழைக்காமல், சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள கொடைக்கானலில் இருந்து ஒரு அதிகாரியைக் கூட்டி வந்து அவசர அவசரமாகப் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இந்தச் செயல்முறையானது தற்போதைய அரசு ஏற்கனவே ஆட்களை முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் செய்து வைத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

Advertisement

இத்தனையும்கூட, கொடைக்கானலில் இருந்து வரவழைக்கப்பட்ட அந்த அதிகாரி சாதாரணப் பத்திரப்பதிவு செய்பவர் அல்ல என்றும், அவர் சிட்பண்ட் நிறுவனங்களை மட்டுமே பதிவு செய்யும் பதிவாளர் என்பதுதான் இதில் உள்ள வேடிக்கை என்றும் பரந்தாமன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பத்திரப்பதிவுத் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in