CRIME
“‘உனக்கு இன்னைக்கு பாடம் புகட்டுறேன்!’.. காவல் நிலையத்திற்குள் புகுந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. லேடி எஸ்.ஐ-யின் அராஜகம்… நெட்டிசன்களை கொதித்தெழ வைத்த வீடியோ..!!
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள சௌபேபூர் காவல் நிலையத்திற்குள், புகார் அளிக்க வந்த பெண்ணை பெண் உதவி ஆய்வாளர் ரோஷ்னி என்பவர் கொடூரமாக அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்னுடைய தினசரி புகார்களால் நான் சலித்துவிட்டேன்; இன்று உனக்கு ஒரு பாடம் புகட்டுகிறேன் என்று கூறி, அந்தப் பெண்ணை உதவி ஆய்வாளர் பலமுறை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் இருந்த மற்றவர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்த போதிலும், இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட 8 வினாடி காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி காவல்துறையின் கொடூர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
A sub-inspector addressing the grievances of a woman at Chubeypur police station in Varanasi, UP. pic.twitter.com/OELi9Nxsgb— Piyush Rai (@Benarasiyaa) July 17, 2026
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, 8 வினாடிகளில் 5 அறைகளா? இதுதான் காவல்துறைப் பயிற்சியா? என நெட்டிசன்கள் பலரும் இந்த அராஜகச் செயலுக்கு எதிராகக் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக சாரநாத் உதவி ஆணையர் வினய் திவேதி உறுதிப்படுத்தியுள்ளார். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
