LATEST NEWS
‘எதுக்கு இது?’.. 700 புகார்களும் அப்படியேதான் இருக்கு… விஜய் தொகுதியில் கதறும் பொதுமக்கள்..!!!
முதலமைச்சர் விஜய் தனது பெரம்பூர் தொகுதியில் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளைப் பதிவிட பிரத்யேக இணையதளம் மற்றும் செயலியைத் தொடங்கி வைத்த நிலையில், அதில் பதிவான 700-க்கும் மேற்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என எழுந்துள்ள குற்றச்சாட்டு அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு, சாலை சீரமைப்பு, மின்சாரப் பிரச்சனைகள் மற்றும் சுகாதாரக் கேடுகள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான புகார்கள் இந்த இணையதளத்தில் பொதுமக்களால் தீவிரமாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், புகார்களின் நிலை எந்தவித முன்னேற்றமும் இன்றி ‘நிலுவையில்’ மட்டுமே காட்டப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
“குறைகளை விரைவாகத் தீர்ப்போம் என வாக்குறுதி அளித்துவிட்டு, புகார்களைப் பெற்று மட்டுமே வைப்பதாக இருந்தால் இந்த இணையதளத்தால் என்ன பயன்?” என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அடிப்படைப் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் முதன்மை எதிர்பார்ப்பாக உள்ளது.
