CINEMA
“நான் என்ன உங்க பப்பட்டா..?” மைக்கை பிடுங்கி துரத்திய அமைப்பாளர்கள்…ருத்ரதாண்டவம் ஆடிய சனம் ஷெட்டி… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
மாணவர்கள் சார்பாகவும் அவர்களுக்கு ஆதரவாகவும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை சனம் ஷெட்டி, நிகழ்வின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் மிகுந்த கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், போராட்ட அமைப்பாளர்களின் செயல்பாடுகளுக்கு எதிராகத் தனது ஆவேசமான கருத்துக்களைப் பதிவு செய்தார். மாணவர்களுக்காகப் பேச மட்டுமே தங்களை அழைத்ததாகக் குறிப்பிட்ட அவர், மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே தன்னிடமிருந்த மைக்கைப் பிடுங்கி அவமானப்படுத்தியதாகக் வேதனை தெரிவித்தார்.
மேலும் காரசாரமாகப் பேசிய சனம் ஷெட்டி, “நீங்கள் சொல்லிதான் நான் பேச வேண்டுமா? நான் என்ன உங்களுடைய பப்பட்டா? மாணவர்களுக்காக மட்டுமே நான் வந்தேன். ஆனால், ‘ஜனநாயகன்’ படம் பார்த்துவிட்டு வந்த என்னை ஜோக்கர் என்று கூறுகிறார்கள். நான் ஒரு படம் பார்த்தால் ஜோக்கரா? இயக்குனர் வெற்றிமாறன் சார் கூட பல படங்களை எடுத்துள்ளார், அப்படியானால் அவரையும் ஜோக்கர் என்று சொல்வீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். ஜனநாயகத்திற்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு, பேசும் போதே மைக்கைப் பிடுங்குவதுதான் இவர்கள் பேசும் ஜனநாயகத்தின் லட்சணமா என்றும் அவர் சாடினார்.
Salute to the GUTS 🫡🫡🫡 pic.twitter.com/kGc3C9EvHx— Pokkiri_Victor (@Pokkiri_Victor) July 24, 2026
தான் எந்த ஒரு அரசியல் நோக்கத்திற்கும் வராமல், பொதுமக்களில் ஒருவராக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க மட்டுமே வந்ததாக அவர் தெளிவுபடுத்தினார். ஆனால், இந்த மேடையைத் தங்கள் அரசியல் அஜெண்டாவிற்குப் பயன்படுத்த நினைக்கும் நபர்களுக்குத் தன்னால் ஒருபோதும் ஆதரவு அளிக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிய அவர், மைக்கைப் பிடுங்கித் தன்னைத் துரத்தியதன் மூலமே அமைப்பாளர்களின் உண்மையான ஜனநாயகம் என்னவென்று புரிந்துவிட்டது என ஆவேசமாகத் தெரிவித்தார்.
