LATEST NEWS
“உங்க வளர்ப்பு சரியில்ல” மரியாதைன்னா என்னான்னே உங்களுக்கு தெரியல.. எதிர்கட்சிகளை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் மரிய வில்சன்..!!
“பார்ட்டி ஃபண்ட்-ன்னா என்னென்னே தெரியாத மாதிரி வெளியில் போனார்கள், உங்களுக்காகவே தனியாக ஒன்று தயாராகி வருகிறது, அன்றைக்கு உங்களுக்கு இருக்கிறது” என்று தவெகவைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் எதிர்க்கட்சியினரை நோக்கிக் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், “எங்கள் தலைவரே நடிப்பை விட்டுவிட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்துவிட்டார், ஆனால் நீங்கள் என்னாமா நடிக்கிறீர்கள்” என்று குறிப்பிட்ட அவர், விமர்சிப்பவர்களுக்கு மரியாதை என்றால் என்னவென்றே தெரியவில்லை என்றும், அவர்களின் வளர்ப்பு அப்படி இருக்கிறது என்றும் காரசாரமாகத் தாக்கிப் பேசினார்.
அரசியல் களத்தில் தவெக அரசின் மீதும், முதலமைச்சர் விஜய் மீதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நிதி மற்றும் நிர்வாகம் சார்ந்த பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் மரிய வில்சன் பேசிய இந்த பேச்சு தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அமைச்சரின் இந்த ஆக்ரோஷமான பேச்சு சமூக வலைத்தளங்களிலும் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
