தலித் அமைச்சர்களை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இருக்கா..?  நீங்க மக்களுக்கு என்ன பண்ணீங்க..? அன்னைக்கு விரட்டி அடிச்சீங்களே.. பா. ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய கூல் சுரேஷ்..!! – cinefeeds
Connect with us

CINEMA

தலித் அமைச்சர்களை விமர்சிக்க உங்களுக்கு தகுதி இருக்கா..?  நீங்க மக்களுக்கு என்ன பண்ணீங்க..? அன்னைக்கு விரட்டி அடிச்சீங்களே.. பா. ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய கூல் சுரேஷ்..!!

Published

on

தலித் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் முன்வைத்த விமர்சனங்களுக்கு நடிகர் கூல் சுரேஷ் பதிலளித்துள்ளது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா. ரஞ்சித், தற்போதைய அரசில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கள் சமூக மக்களுக்கு செய்த நலன்கள் என்ன என்றும், அமைச்சர் ராஜ்மோகன் போதுமான அளவில் குரல் கொடுக்கவில்லை என்றும் விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், இது அனைத்து மக்களுக்குமான அரசு என்றும், பேச்சை விடச் செயல்பாடுகள் மூலம் மக்களுக்கு நன்மைகளைச் செய்து காட்டுவோம் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்த நடிகர் கூல் சுரேஷ், தலித் அமைச்சர்களைக் கேள்வி கேட்கும் பா. ரஞ்சித் இதுவரை பொதுமக்களுக்காக என்ன செய்துள்ளார் என நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

மேலும், வாய்ப்பு கேட்டு பா. ரஞ்சித்தின் வீடு மற்றும் அலுவலகத்திற்குப் பலமுறை சென்றும் தனக்குச் சிறிய வாய்ப்பு கூட வழங்கவில்லை என கூல் சுரேஷ் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுச் குறுகிய காலமே ஆன நிலையில், அதன் செயல்பாடுகளை விமர்சிப்பதை விட, சமூகத்திற்குப் பா. ரஞ்சித் செய்த பங்களிப்பு என்ன என்பதை அவர் முதலில் விளக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பா. ரஞ்சித் மீதான கூல் சுரேஷின் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் தற்போது சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in