LATEST NEWS
“என்னடா இது… ஊஞ்சல் கிடைக்கலனு பைக்கையே தூக்கி மரத்துல கட்டிட்டாங்க போல..!” இணையத்தைக் கலக்கும் அபாயகரமான வைரல் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் தினமும் பலவிதமான வீடியோக்கள் வெளியாகி மக்களை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்திய விதம் காண்போரைக் திகைக்க வைத்துள்ளது. ஒரு பெரிய மரத்தின் உயரமான கிளையில் இரு தடிமனான கயிறுகளைக் கட்டி, அதன் மறுமுனையில் மோட்டார் சைக்கிளைப் பிணைத்து ஊஞ்சல் போல அமைத்துள்ளனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் அமரும் இளைஞர், ஆக்ஸிலரேட்டரை முடுக்கும்போது, கயிறுகளின் உதவியுடன் பைக் காற்றில் மேலே எழும்பி ஊஞ்சல் போல் முன்னும் பின்னும் ஆடத் தொடங்குகிறது. இந்த விசித்திரமான சாகசத்தைப் பார்க்க சுற்றிலும் மக்கள் கூடியிருந்தாலும், அதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து பைக்கிலிருந்து சற்று தள்ளியே நிற்கின்றனர்.
இந்த வீடியோ ‘X’ தளத்தில் பகிரப்பட்டதில் இருந்து ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலர் இதற்கு வேடிக்கையான கருத்துகளைத் தெரிவித்து வரும் அதே வேளையில், கயிறு அறுந்தாலோ அல்லது பைக்கின் சமநிலை குறைந்தாலோ பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால், இதுபோன்ற ஆபத்தான சாகசங்களைச் செய்யக்கூடாது என்றும் எச்சரித்து வருகின்றனர்.
