LATEST NEWS
திமுக வன்முறை..! உதயநிதி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களைத் தாக்கிய திமுகவினர்… வீடியோவை வெளியிட்டு அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி கண்டனம்..!!
தஞ்சாவூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், தவெக அமைச்சர்களை விமர்சித்தும், ஒரு நடிகை குறித்து இரட்டை அர்த்தத்திலும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இது தொடர்பாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார்.
உதயநிதி ஸ்டாலின் கைதை எதிர்த்து திமுகவினர் பல்வேறு இடங்களில் கடைகளை மூடச் சொல்லியும், வாகனங்களை நிறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் என்று கூறிய இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை திமுகவினர் சரமாரியாகத் தாக்கி, அவரது வாகனத்தைக் கீழே தள்ளி அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வன்முறை வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ள தவெக அமைச்சர் ராஜ்மோகன், பெண்களைத் தரக்குறைவாகப் பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையைக் கையில் எடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். பேச்சில் வன்கொடுமையும் செயலில் வன்முறையும் கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
