LATEST NEWS
“ஏண்டா டேய்… காதலி கிடைக்கலைன்னு இப்படியாடா செய்வ…?!” கணவனை ஜெயிலுக்கு அனுப்ப துடித்த முன்னாள் காதலனின் ‘மாஸ்டர் பிளான்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!
ஜம்மு-காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டம் சஃபாபோரா பகுதியைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவருக்கு, போதைப்பொருள் அடங்கிய கூரியர் பார்சல் வந்து சேர்ந்ததை அடுத்து, ரகசியத் தகவலின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கோழித் தீவன மாதிரிகள் எனக்கூறி அனுப்பப்பட்ட அந்த பார்சலில் கோகைன், சாராஸ் மற்றும் மாத்திரைகள் இருந்ததால் NDPS சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பின்னணியில் இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கப்பட்டனர்.
ஆனால், தீவிர விசாரணையில் அந்த நபருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளதும், இந்தச் சம்பவத்தில் அவர் நிரபராதி என்பதும் தெரியவந்தது. அவருக்கு சவுதி அரேபிய எண்ணிலிருந்து வந்த அழைப்புகளை ஆய்வு செய்தபோது, திருமணத்திற்கு முன்பே அதே எண்ணிலிருந்து “அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யக் கூடாது” என எச்சரிக்கை விடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரது மனைவியின் அழைப்புப் பதிவுகளை ஆய்வு செய்ததன் மூலம், ஸ்ரீநகரின் ஜைனகோட்டை சேர்ந்த தாரிக் அகமத் சோஃபி என்பவரே இந்தச் சதியின் பின்னணியில் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
கைது செய்யப்பட்ட தாரிக், தனது முன்னாள் காதலியின் கணவரைப் பொய் வழக்கில் சிக்க வைக்கவே இத்திட்டத்தைத் தீட்டியதாக ஒப்புக் கொண்டார். இதற்காக கான்பூரில் உள்ள தனது நண்பன் அரீப் மூலம், போதைப்பொருட்கள் அடங்கிய பார்சலை கோழிப்பண்ணை உரிமையாளருக்குக் கூரியரில் அனுப்ப வைத்துள்ளார். இந்தச் சதித்திட்டத்திற்குப் பிறகு அரீப் சவுதி அரேபியாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையினரின் கூர்மையான விசாரணையால் அப்பாவி நபர் போலி வழக்கில் சிக்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.
