LATEST NEWS
மவனே உனக்கு எவ்வளவு தைரியம்டா..? டெல்லி மெட்ரோவில் பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்த நபர்… மாட்டிக்கொண்டதும் டெலீட் செய்தும் ஓட முடியல..! செம டோஸ் கொடுத்த பெண்கள்..!!
தில்லி மெட்ரோ ரயிலில் பிரவீண்யா என்ற பெண் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு எதிரே அமர்ந்திருந்த ஒரு நபர், அவருடைய அனுமதியின்றி ரகசியமாகப் படம் மற்றும் வீடியோ பதிவு செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக அந்த நபரிடம் சென்று அவரது கைபேசியைச் சரிபார்க்கக் கேட்டுள்ளார். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், அந்த நபர் அவசர அவசரமாகத் தான் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கிவிட்டு , ஒன்றுமே தெரியாதது போல் கைபேசியைக் கொடுத்துள்ளார்.
இருப்பினும், சாதுரியமாகச் செயல்பட்ட அந்தப் பெண், கைபேசியின் ‘Recently Deleted’ பகுதிக்குச் சென்று பார்த்தபோது, அதில் அவர் நீக்கிய புகைப்படங்களும் வீடியோக்களும் அப்படியே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த நபரின் தவறு வெட்டவெளிச்சமானது. “அனுமதியின்றி யாருடைய புகைப்படத்தையோ வீடியோவையோ எப்படி எடுக்கலாம்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று அப்பெண் தைரியமாகக் கேள்வி எழுப்பி, மெட்ரோ பயணிகள் முன்னிலையில் அவரைக் கண்டித்தார். இதனால் பயந்துபோன அந்த நபர் அமைதியாகி, அங்குள்ள பயணிகள் அனைவரும் பார்க்கும்படி அவமானமடைந்தார்.
https://www.instagram.com/reel/DbxwM-XTCDE/?utm_source=ig_web_button_share_sheet
இந்தச் சம்பவத்தின் வீடியோவை பிரவீண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “பெண்களுக்குப் பொது இடங்களில் பாதுகாப்பு எங்கே இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களையும், ஆயிரக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது. “மெட்ரோவில் பெண்களுக்குத் தனிப் பெட்டி ஏன் தேவைப்படுகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சான்று” என்றும், அப்பெண்ணின் துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டியும் இணையவாசிகள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
