CRIME
“அப்பா சண்டைபோட்டு வீட்டைவிட்டு ஓடிவிட்டார்..!” தாயும் மகளும் சேர்ந்து ஆடிய நாடகம்… மகனின் புகாரால் அம்பலமான உண்மை.. திடுக்கிடவைக்கும் பின்னணி..!!
ரேபரேலி மாவட்டம் ஹர்சந்த்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரைன் கிராமத்தில், குடிகாரக் கணவனின் தொடர்ச்சியான தொல்லை மற்றும் குடும்பக் கட்டுப்பாடுகளால் ஆத்திரமடைந்த தாயும் மகளும் சேர்ந்து தந்தையைக் கொலை செய்து வீட்டிற்கு அருகில் உள்ள குழியில் புதைத்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் வேலை செய்து வந்த மகனிடம் தந்தை சண்டையிட்டுவிட்டு வீட்டைவிட்டுப் போய்விட்டதாக நாடகமாடிய தாயின் மீது சந்தேகம் கொண்ட போலீசார், மகன் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
மகள் காதலிப்பதாகக் கூறி அவளையும் அடித்துத் துன்புறுத்தியதுடன், தினமும் குடித்துவிட்டுத் தங்களைச் சித்திரவதை செய்து வந்த தந்தையின் தொல்லையால் பொறுமை இழந்த தாயும் மகளும் சேர்ந்து அவரை இரும்புத் கம்பியால் தாடைக் குத்திக் கொன்றுள்ளனர்; குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சடலத்தை மீட்ட காவல்துறையினர் அதனைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலைச் செயலில் ஈடுபட்ட தாய் மற்றும் மகளைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
