CRIME
“ஒரு நன்கொடைக்காக இப்படியா..?” ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த கும்பல்… கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்த 3 உயிர்கள்.!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில், ராம்லீலா கமிட்டிக்கு நன்கொடை வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், தொழிலதிபரான உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் உட்பட மூன்று பேர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, நன்கொடை விவகாரம் தொடர்பாகத் தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதங்களுடன் அந்தத் தொழிலதிபர் சகோதரர்களின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கும்பல், அங்கிருந்தவர்களைத் தடிகளாலும் கம்புகளாலும் கொடூரமாகத் தாக்கியதுடன், துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளியுள்ளனர்.
இந்தக் கொடூரத் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே தொழிலதிபர் சகோதரர்கள் உள்ளிட்ட மூன்று பேர் துடிதுடிக்க உயிரிழந்தனர். மேலும், இத்தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு நபரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த பிலிபித் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூரக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
