“உன்ன பெத்ததுதான் எங்க தப்பு…” மாதம் 95,000 சம்பளம் போனதும் மாறிய பெற்றோரின் முகம்.. 2 நாட்கள் பட்டினியாகக் கிடந்த ஐடி இளைஞரின் கண்ணீர்க் கதை..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உன்ன பெத்ததுதான் எங்க தப்பு…” மாதம் 95,000 சம்பளம் போனதும் மாறிய பெற்றோரின் முகம்.. 2 நாட்கள் பட்டினியாகக் கிடந்த ஐடி இளைஞரின் கண்ணீர்க் கதை..!!”

Published

on

மாதம் 95,000 ரூபாய் சம்பளம் வாங்கிய ஐடி வேலை பறிபோனதால், தனது பெற்றோரின் நடத்தை முற்றிலும் மாறிவிட்டது என்ற வேதனையான அனுபவத்தை 22 வயதான வாலிபர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஐடி துறையில் வேலைக்குச் சேர்ந்து வெறும் 6 மாதங்களிலேயே அவர் வேலையிழந்துள்ளார். இந்த கஷ்டமான சூழ்நிலையில் பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்த நிலையில், கடந்த ஒரு மாதமாகவே அவர்கள் அவரை சோம்பேறி என்று கூறித் திட்டித் தீர்ப்பதாகவும், “உன்னைப் பெற்றெடுத்ததே நாங்கள் செய்த தவறு” என்று கோபத்தில் கூறியதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அந்த வாலிபரிடம், தனது பைக் பெட்ரோலுக்குக் கூட பணமில்லை. ஒருமுறை பைக் பெட்ரோல் இன்றி நின்றதால், அதை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் தள்ளிக் கொண்டே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தனக்கு வெயிலாக இருக்கிறது என்று கூறி வீட்டில் இருந்த ஏர் கூலரையும் பெற்றோர் அவரிடமிருந்து பறித்துக் கொண்டுள்ளனர். இரண்டு நாட்களாக உணவின்றிப் பட்டினியாகக் கிடப்பதாகவும், இவ்வளவு சிரமப்பட்டும் வீட்டில் யாரும் தன்மீது அக்கறை காட்டவில்லை என்றும் அவர் கூறியதுடன், செலவுகளுக்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடகைக்கு எடுத்து உணவு டெலிவரி செய்ய முயற்சித்தும், அதனால் புதிய வேலைக்கான நேர்காணலுக்குத் தயாராக நேரமில்லை என்பதால், இப்போது இரவில் செக்யூரிட்டி கார்டு வேலை தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இந்தக் கடினமான காலம் தனக்கு வாழ்க்கையின் கசப்பான உண்மையைச் சொல்லிக் கொடுத்துள்ளதாகவும், கெட்ட காலத்தில் சொந்தக் குடும்பமே கைவிட்டுவிடும் என்றும் அவர் உருக்கமாக எழுதியுள்ளார். மக்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத் தேவைக்காகச் சிறிதளவு பணத்தைச் சேமித்து வைக்க வேண்டும், இல்லையெனில் வேலை போகும் காலத்தில் மற்றவர்கள் முன் நிர்கதியாக நிற்க நேரிடும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தனது வேதனையைப் பகிர்ந்துகொள்ள ரெடிட் தவிர வேறு வழி இல்லாததால் எழுதியதாகவும், யாரிடமும் மனக்கசப்பு இல்லை என்றும் கூறி அந்த வாலிபர் தனது பதிவை முடித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in