CRIME
“என் மனைவியை ஏன்டா போட்டோ எடுக்கிங்க..?” ஜன்னல் வழியாக அத்துமீறிய கொடூரர்கள்.. தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த பயங்கரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
கட்டிடத்தின் ஜன்னல் வழியாகத் தனது மனைவியைப் புகைப்படம் எடுத்ததை தட்டிக்கேட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ஹிருதாய் குமார் ஹரிஜன், அமீன் மற்றும் அவனது இரு கூட்டாளிகளால் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்து வந்த ஹிருதாய் குமார், தனது வீட்டின் ஜன்னல் வழியாகத் தர்மசங்கடமான முறையில் அத்துமீறித் தனது மனைவியை அமீன் புகைப்படம் எடுத்ததை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த அநாகரிகமான செயலை அவர் உடனடியாகத் தடுத்துக் கேள்வி எழுப்பியபோது, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அமீன் மற்றும் அவனது இரு கூட்டாளிகள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹிருதாய் குமாரைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்தக் கொடூரமான தாக்குதலில் படுகாயமடைந்த ஹிருதாய் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது அநியாய மரணம், உழைத்துத் பிழைத்து வந்த அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. தனது நேர்மையான கணவனை இழந்த தவிப்பில் மனைவி கதறித் துடிக்கும் அதே வேளையில், தங்களது அன்பான தந்தையை இழந்து தவிக்கும் இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வழக்குப்பதிவு செய்துள்ள உள்ளூர் காவல்துறையினர், தப்பியோடிய முதன்மைக் குற்றவாளியான அமீன் மற்றும் அவனது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
