CRIME
“ஜெயிலுக்கு அனுப்பிவிடுவேன்.. ” என மிரட்டிய லிவ்-இன் காதலி.. தொழிலதிபரின் மர்ம மரணத்தில்.. தாயின் பரபரப்பு குற்றசாட்டு.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அவத் கிரீன் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து, 28 வயதான கஃபே உரிமையாளர் ஷிவா ஷர்மா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிவாவின் உடல் முழுவதும் கொடூரமான தாக்குதல் காயங்கள் இருந்ததாகவும், மூக்கில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் அவனது இரண்டு கால்களின் எலும்புகளும் உடைந்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஷிவா கடந்த நான்கு மாதங்களாக ஸ்ரத்தா துபே என்ற பெண்ணுடன் லிவ்-இன் உறவில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், இது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்று ஷிவாவின் தாய் ரஞ்சனா ஷர்மா காவல் நிலையத்தில் பரபரப்புப் புகார் அளித்துள்ளார். ஷிவா அந்தப் பெண்ணை விட்டுப் பிரிந்து வர விரும்பியதாகவும், ஆனால் ஸ்ரத்தா தன் மீது போலிப் புகார்களைக் கூறி சிறைக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டி ஷிவாவை பிளாக்மெயில் செய்து வந்ததாகவும் அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் திடுக்கிடும் புகாரின் அடிப்படையில் காதலி ஸ்ரத்தா துபே, அவரது சகோதரி ரஷ்மி, ஆதில் மற்றும் ஓட்டுநர் தாரிக் என்கிற டேனிஷ் ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
