அடச்சீ.. குழந்தைகளிடம் ஆபாசமாக அத்துமீறிய ஆசாமி.. நடுரோட்டில் மக்கள் செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தை அதிரவைத்த பரபரப்பு வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ.. குழந்தைகளிடம் ஆபாசமாக அத்துமீறிய ஆசாமி.. நடுரோட்டில் மக்கள் செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தை அதிரவைத்த பரபரப்பு வீடியோ..!!

Published

on

உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனின் மோத்ரோவாலா பகுதியில், பல குழந்தைகளிடம் அநாகரிகமான மற்றும் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் என்ற நபரை உள்ளூர் மக்கள் கையும் களவுமாகப் பிடித்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரின் முகத்தில் கரியைப் பூசி, வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று தர்மஅடி கொடுத்துள்ளனர். இது குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுவர்களுக்கு எதிரான அநாகரிக செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஜிதேந்திர சிங் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அவரை அதிரடியாகச் சிறையில் அடைத்தனர்.

அதே நேரத்தில், சட்டம் ஒழுங்கைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரின் முகத்தில் கரியைப் பூசி, நடுரோட்டில் ஊர்வலமாக அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கிய பொதுமக்கள் மீதும் போலீசார் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமே தவிர, வீதியில் வைத்துச் சட்டத்தை மீறுவதை அனுமதிக்க முடியாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த இருதரப்பு எஃப்.ஐ.ஆர் பதிவு டேராடூன் பகுதியில் தற்போது பெரும் பரபரப்பையும் சமூக விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in