“தண்ணில விஷம் கலந்து கொல்ல பாக்குறான் சார்” சக பெண் ஊழியரின் குடிநீரில் ‘கேட்மியம்’ விஷத்தை கலந்த பாவி.. ரகசிய கேமராவில் சிக்கிய பகீர் காட்சி..! – cinefeeds
Connect with us

CRIME

“தண்ணில விஷம் கலந்து கொல்ல பாக்குறான் சார்” சக பெண் ஊழியரின் குடிநீரில் ‘கேட்மியம்’ விஷத்தை கலந்த பாவி.. ரகசிய கேமராவில் சிக்கிய பகீர் காட்சி..!

Published

on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பணியாற்றிய ரோங் யுவான் என்ற பெண், தனது அலுவலகத்தில் சக ஊழியரால் எதிர்கொண்ட கொடூரமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவருடன் பணியாற்றிய டேவிட் ஜு என்ற சக ஊழியர், யுவானின் குடிநீரில் கேட்மியம் என்ற நச்சுப் பொருளைக் கலந்து கொல்ல முயன்றது ரகசிய கேமரா மூலம் அம்பலமானது.

கடந்த 2017 முதல் யுவானுக்கு தொடர்ச்சியான உடல்நலக்குறைவு, முடி உதிர்தல் மற்றும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த அவர் தனது மேஜைக்கு அருகில் ரகசிய கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார். அப்போது, டேவிட் ஜு ஒரு சிறிய வெள்ளை பாட்டிலில் இருந்து திரவத்தை எடுத்து யுவானின் குடிநீரில் ஊற்றும் அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்தத் தகவலை அவர் உடனடியாகக் காவல்துறையிடம் அளித்ததுடன், சோதனையில் அவர்களது இரத்தத்திலும் நச்சுத்தன்மை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

இந்த வழக்கில் டேவிட் ஜு மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர் மீதான சோதனைக் காலம் முடிவடைந்ததை அடுத்து தனது குற்றப் பதிவை நீக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணோ தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் தனது தொடரும் உடல்நலப் பாதிப்புகளுக்கும் போதிய நீதி கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்த நச்சு கலக்கும் அதிர்ச்சி வீடியோவை அவர் தற்போது வெளியிட்டுள்ளதால் இச்சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in