LATEST NEWS
பூந்தி வாங்க போன கணவன் சடலமாக திரும்பினார்… லிப்ட் கேட்டு டிராக்டரில் ஏறியபோது நேர்ந்த சோகம்… 4 மாத குழந்தையுடன் கதறும் மனைவி… பெரும் சோகம்..!!
கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் ராஜ்புத் என்பவரின் மனைவியும் குழந்தைகளும் பூந்தி சாப்பிட ஆசைப்பட்டுள்ளனர். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்ற அபிஷேக் சந்தைக்குப் புறப்பட்டார். ஆனால், வீதியோரத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தும் அரசு பேருந்து அல்லது பிற பொதுப் போக்குவரத்தோ வரவில்லை. இதனால் வேறு வழியின்றி, சீக்கிரம் வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அவ்வழியாக வந்த டிராக்டரில் லிஃப்ட் கேட்டு ஏறியுள்ளார்.
பயணத்தின் போது, சாலையிலிருந்த ஒரு பெரிய பள்ளத்தில் டிராக்டர் பலமாக குலுங்கியதில் அபிஷேக் தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து, டிராக்டரின் சக்கரத்திலேயே சிக்கிக் கொண்டார். இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த டிராக்டர் ஓட்டுநர் பயந்துபோய் அங்கிருந்து தப்பி ஓடிவிட, அபிஷேக் வலியால் துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில், 4 மாதக் குழந்தை மற்றும் கதறி அழும் இளம் மனைவியை அவர் தவிக்கவிட்டுச் சென்றுள்ளார். குடும்பத்திற்கு பூந்தி வாங்கச் சென்றவர், சடலமாகத் திரும்பிய சம்பவம் அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளது. சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் கடந்த பின்னரும் கிராமப்புறங்களின் பொதுப் போக்குவரத்து நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இந்த சோக சம்பவமே சான்றாகும்.
