LATEST NEWS
“100 நாட்கள் ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” – சிங்கப்பெண் படை முதல் 717 மதுக்கடை மூடல் வரை.. அதிரடி சாதனைகளுடன் வீடியோ வெளியிட்ட முதலமைச்சர் விஜய்…!!
தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில், ‘ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி’ என்ற தலைப்பில் முதலமைச்சர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக கடந்த மே 10-ந்தேதி பதவியேற்ற அவர், தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றதும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பிற்கான சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் ஆகிய 3 முக்கிய திட்டங்களை அமல்படுத்தும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தற்போது தவெக அரசின் 100 நாள் சாதனைகளைக் குறிப்பிடும் வகையில் முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவில், பெண்களின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை மற்றும் தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் உள்ளிட்ட தவெக அரசின் முக்கிய திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
