LATEST NEWS
“ஜெயலலிதா வழியில் விஜய்..!” ஆனால் அரசு அதிகாரிகளாலேயே வழியில் தடைபடும் அதிரடி நடவடிக்கைகள்.. அரசியல் அரங்கில் வெடிக்கும் பரபரப்பு..!!
தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் அவர்களின் ஆட்சியின் கீழ் எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மீதான கைது நடவடிக்கைகள் குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, முதல்வர் மீது அவதூறாகப் பேசியதாகத் தூத்துக்குடி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வுகளும் மாநில அரசியலில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தைப் போன்ற அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் விஜய் கையாள்வதாகவும், இதன் மூலம் திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னிறுத்த அவர் முயல்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், நிர்வாகத்தில் அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் போதிய ஆதாரங்களைத் திரட்டுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சில நடவடிக்கைகள் தொய்வடைவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
