LATEST NEWS
CM வரும்போது எழுந்து நிற்பது கட்டாயமா..? உதயநிதிக்கு எதிராக சட்டப்பேரவையில் கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்.. முற்றுப்புள்ளி வைத்த சபாநாயகர்..!!
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வருகையின் போது உதயநிதி ஸ்டாலின் எழுந்திருக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் அவையில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், சபாநாயகர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அமைச்சர் ரமேஷின் கருத்தை சுட்டிக்காட்டிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் வரும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வரும்போதும் அனைவரும் எழுந்திருக்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், முதல்வர் அவைக்கு வரும்போது உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி எதுவுமில்லை என விளக்கம் அளித்தார்.
