LATEST NEWS
“TTE-வா இல்லை செக்யூரிட்டியா…?” நம்ம ஊரு போஸ்ட்மேன் கூட இவரை விட கெத்தா இருப்பாரு..! வைரலாகும் பாகிஸ்தான் TTE வீடியோவும் இணையவாசிகளின் அல்டிமேட் கலாய்களும்..!!
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. அதில், பாகிஸ்தான் ரயிலின் பிசினஸ் கிளாஸ் பெட்டியில் TTE ஒருவர் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார். அவர் சாதாரணமான முறையில் டிக்கெட் சோதித்தாலும், அவர் அணிந்திருந்த ஆடைக் கட்டுப்பாடு இந்திய சமூக வலைத்தளப் பயனர்களின் கவனத்தை ஈர்த்து சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. காக்கி நிற சபாரி சூட் அணிந்து காணப்பட்ட அந்த TTE-வை, மக்கள் ஹவில்தார், காவலர் அல்லது பஸ் நடத்துனருடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
இந்திய இரயில்வேயில் TTE-க்கள் மிகவும் கம்பீரமான தோற்றத்தில் உடை அணிந்திருக்கும் நிலையில், பாகிஸ்தானில் TTE-க்கு காக்கி நிற சபாரி சூட் சீருடையாக வழங்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் @pktrains என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்ட இந்த வீடியோவில், TTE தனது மொபைல் போன் மற்றும் ஸ்கேனிங் இயந்திரம் மூலம் பயணிகளின் டிக்கெட்டுகளைச் சரிபார்க்கிறார். இதைப் பார்த்த இந்தியப் பயனர்கள் கருத்துப் பிரிவில் கிண்டலாகப் பதிவிடத் தொடங்கினர். சிலர் “இவர் டிசியா அல்லது ஏதேனும் சொசைட்டியின் செக்யூரிட்டியா?”, “இவர் பஸ் நடத்துனர் அல்லது ஆட்டோ டிரைவர் போல இருக்கிறார்” என்றும், “எங்கள் ஊரில் அஞ்சல்காரர் கூட இவரை விடச் சிறந்த உடை அணிகிறார்” என்றும் கலாய்த்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
https://www.instagram.com/reel/Db-MjdmMs18/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று இந்தியாவிலும் ட்ரெண்டாகி வரும் நிலையில், இரு நாடுகளின் இரயில்வே கட்டமைப்பிற்கு இடையே உள்ள பெரும் வித்தியாசமும் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் 1.26 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான ரயில் பாதைகளும் 7,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களும் உள்ளன. ஆனால் பாகிஸ்தானில் வெறும் 11,881 கிலோமீட்டர் ரயில் பாதையும் 450 முதல் 460 ரயில் நிலையங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
