LATEST NEWS
“ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே” காலை உணவுத் திட்ட விவகாரத்தில் வெடித்த மோதல்… சட்டமன்றத்தில் எ.வ.வேலு சரமாரி கேள்வி..!!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றி, அதற்குப் பெருந்தலைவர் காமராஜரின் பெயரைச் சூட்டியுள்ளதற்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கடும் எதிர்ப்புத் தெரிவித்துச் சரமாரி கேள்விகளை எழுப்பினார். “ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், ஏற்கனவே சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஒரு திட்டத்தின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் தற்போதைய அரசுக்கு என்ன வந்தது என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
மேலும், பெருந்தலைவர் காமராஜர் மீது இந்த அரசுக்கு உண்மையிலேயே உரிய மதிப்பும் மரியாதையும் இருந்தால், அவராகவே ஒரு புதிய மக்கள் நலத் திட்டத்தை உருவாக்கி அதற்கு காமராஜரின் பெயரை வைத்திருக்க வேண்டும் என்று தற்போதைய ஆளுங்கட்சிக்கு அறிவுறுத்தினார். ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்குப் பெயர் மாற்றுவது முறையான அரசியல் அல்ல என்று எ.வ.வேலு அவையில் காரசாரமாக வாதிட்டார்.
