LATEST NEWS
“3-வது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு” – பெண் ஊழியர்களுக்கு அறிவிப்பை அள்ளி வீசிய அமைச்சர் சரத்…!!
தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அரசுப் பணியாளர்களுக்குப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, இரண்டு அல்லது அதற்கு குறைவான குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசுப் பணியாளர்களுக்கு, தற்சமயம் மூன்றாவது குழந்தை பிறக்கும் போதும் 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உயர்த்தி வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்த புதிய சலுகையானது அரசுப் பெண் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்காகப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் அமைச்சர் சரத்குமார் வெளியிட்டார். அரசுப் பணியிடங்களை நிரப்பவும், போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் நபர்களுக்கு உதவும் வகையிலும் ரூ.20 லட்சம் செலவில் ‘வெற்றிப்பாதை செயலி’ உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக, ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் புதிய TNPSC இணைப்பு கட்டிடங்கள் கட்டப்படும் என்றும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
